Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித்துக்கு

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு சஜித்துக்கு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இருக்கும் என காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபிக் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியியுன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தமது கட்சியின் அதியுயர் சபை இறுதித் தீர்மானத்தை எட்டவில்லையென்றாலும், எதிர்க்கட்சித் தலைவர் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தேசிய அமைப்பாளர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் ஏற்கனவே இணைந்து செயற்பட்டுள்ளதால், சஜித் பிரேமதாசவுக்கு உச்ச சபையின் ஆதரவு கிடைக்கும் என தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபிக் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles