Wednesday, September 17, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி

பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – ஜனாதிபதி

ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு அப்பால் வேறொரு தினத்தில் நடத்த தாம் தயாராக இல்லை எனவும், ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 21ஆம் திகதி நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தல் என்பது மக்களின் இறையாண்மையின் ஒரு அங்கம் எனவும் அதனை மீற இடமளிக்க முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், அரசியலமைப்பின் 106ஆவது சரத்தின் பிரகாரம் நாட்டில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்கு பூரண ஆதரவை வழங்குவது அனைவரினதும் பூரண கடமை எனவும் தெரிவித்தார்.

ஹோமாகம பஸ்தரிப்பு நிலைய வளாகத்தில் நேற்று (27) நடைபெற்ற ‘ஜெயகமு ஸ்ரீலங்கா’ கொழும்பு மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles