Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் எதிர்காலம் மக்களின் கைகளிலேயே உள்ளது - ஷெஹான் சேமசிங்க

நாட்டின் எதிர்காலம் மக்களின் கைகளிலேயே உள்ளது – ஷெஹான் சேமசிங்க

தேர்தலில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்தித்தே முன்னுரிமை அளிக்க வேண்டும் என நிதிராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை மீண்டும் இந்த நாட்டில் ஏற்படக்கூடாது என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.

எனவே தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில் தேர்தலில் எவரும் வாக்களிக்க முடியாது. நாடு தொடர்பிலும் மக்கள் தொடர்பிலும் சிந்திக்கும் ஒருவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவேண்டும்.

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் ஒன்றே இடம்பெறவுள்ளது. தற்போதைய ஜனாதிபதி நாட்டு மக்களின் ஒத்துழைப்புடனேயே பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை கட்டியெழுப்பினார்.

எனவே நாட்டின் எதிர்காலம் தற்போது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. அதாவது மீண்டும் வீழ்ச்சிப்பாதைக்கு செல்வதா அல்லது அபிவிருத்தி அடைந்த நாடு என்ற ரீதியில் முன்னேறி செல்வதா என்பது தொடர்பாக மக்கள் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும்.

தேர்தலில் மக்களின் தீர்மானம் தவறாகும் பட்சத்தில் நாடு மீண்டும் 2022 ஆம் ஆண்டின் வீழ்ச்சிபாதை நோக்கிப் பயணிக்கும். அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் 5 வருடங்களுக்கு அந்த நெருக்கடி நிலைமை நீடிக்கும். எனவே தேர்தலில் அரசியல் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நாடு தொடர்பில் சிந்தித்தே முன்னுரிமை அளிக்க வேண்டும்” என ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles