சீனாவில் கயாமி புயல் காரணமாக கனமழை பெய்தததால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிர்ழந்துள்ளனர்
சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
இந்நிலையில், சம்பவ இடத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்டோரை மீட்டு, நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் தரைமட்டமான வீடுகளுக்குள் சிக்கி இருந்த 18 பேரில், 11 பேர் உயிர்ழந்துள்ள நிலையில் கண்டெடுக்கப்பட்டதுடன், படுகாயங்களுடன் ஆறு பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.