காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு இன்று (29) நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (29) காலை 8 மணி முதல் நாளை (30) அதிகாலை 2 மணி வரை 18 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும்.
ஹப்புகல நீர்த்தாங்கியின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, போபே, பொத்தல, ஹப்புகம, ரத்கம, புஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.