தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களின் உதவித்தொகையை ஆகஸ்ட் மாதம் முதல் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபா கொடுப்பனவு அடுத்த மாதம் முதல் 8,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த உயர்த்தப்பட்ட உதவித்தொகை, தற்போது இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் வழங்கப்படும்.
மேலும் புதிய மாணவர்களுக்கான உதவித்தொகை செப்டம்பர் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.