Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய சிங்கப்பெண்கள்

இந்தியாவை வீழ்த்தி ஆசிய கிண்ணத்தை கைப்பற்றிய சிங்கப்பெண்கள்

மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆசியக் கிண்ணத்தை இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles