கறுவாத்தோட்டம் – வோர்ட் பிளேஸ் பகுதியில் கடந்த 23ஆம் திகதி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கிராண்ட்பாஸ் – சமகி மாவத்தை பகுதியில் நேற்று முன்னெடுத்த சோதனையின் போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 35 மற்றும் 48 வயதுடைய இருவர் என பொலிஸ் தெரிவித்துள்ளது.