எதிர்வரும் சில மாதங்களில் வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த வருடங்களில் நிலவிய அந்நியச் செலாவணி வீழ்ச்சி காரணமாக வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் தற்போதை பொருளாதார மறுசீரமைப்பின் பின்னர் அத்தியாவசிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை வீழ்ச்சியடைந்திருந்த வாகன சந்தை மீண்டு வளர்ச்சியை நோக்கி முன்னோக்கிச் செல்கின்றது. அத்துடன் பாரியளவில் அதிகரித்த வாகனங்களின் விலை, தற்போது 60 சதவீதத்தால் குறைவடையும் என குறித்த துறைசார்ந்த வர்த்தகர்கள் தெரிவிப்பதாக லங்காதீப பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.