அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு இம்மாதம் 31ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்புக்காக 454,924 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக 1,854,000 பேருக்கு நன்மைகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.