பிட்டிகல – மாபலகம வீதியின் மத்தக்க பகுதியில் நேற்று (25) இரவு கோர வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு பாரவூர்தியும் காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரண்டு பெண்கள் படுகாயமடைந்து எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகதெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதியை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.