மேற்கு ஆபிரிக்காவின் மொரிட்டானியாவில் 300 ஏதிலிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் ஏதிலிகளுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது.
மொரிட்டானிய கடலோரக் காவல்படை சுமார் 120 பேரைக் காப்பாற்றியதாகவும், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காப்பாற்றப்படவர்களில் 10 பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களாக வீசிய பலத்த காற்று காரணமாக சுமார் 30 சடலங்கள் கடற்கரையில் இருந்து கரை ஒதுங்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, மீதியுள்ள சடலங்களும் அவ்வாறே கரையொதுங்கும் என அதிகாரிகள் நம்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பாதை ஐரோப்பாவில் புகலிடம் அல்லது வேலை வாய்ப்புகளை நாடும் ஆபிரிக்கர்களால் பயன்படுத்தப்படுகிறது. இது உலகின் மிக ஆபத்தான பாதைகளில் ஒன்றாகும்.