ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான மேலதிக விசாரணைகளைத் தடுக்கும் வகையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று (24) மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்ததுடன், இது தொடர்பான இடைக்கால தடை உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.