அரச சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3,000 ரூபா வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இந்தக் கொடுப்பனவு மூலம் 7 இலட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள் எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.