வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அவரியவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கடத்திய ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 513 கிராம் 920 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருள் கடத்தலில் ஈட்டியதாக கருதப்படும் 2 இலட்ச ரூபா ரொக்கப் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.