Sunday, April 20, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது

எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியது

பிலிப்பைன்ஸின் மணிலா வளைகுடாவுக்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் கொடியுடன் பயணித்த MT Terra Nova என்ற கப்பலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல் இவ்வாறு மூழ்கியுள்ளதாகவும் கப்பலின் எரிபொருள் கசிந்துள்ளதாகவும் தற்போது கப்பல் மூழ்கிய பகுதியை சுற்றிலும் பெரிய எண்ணெய் கறைகள் காணப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தின் போது 17 பணியாளர்கள் இருந்தனர். அவர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர்.

ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles