பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும்.
தென்மேற்கு பருவமழை செயலில் இருப்பதால், அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் மிக பலத்த காற்று வீசக்கூடும் மற்றும் கடல் மிகவும் கொந்தளிப்பாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட வரைபடத்தில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள கடல் பகுதியில் மறு அறிவித்தல் வரை மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் படகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.