Saturday, May 3, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இரத்து

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு வர்த்தமானி இரத்து

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1,700 ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் வௌியிட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 21ஆம் திகதி தம்மால் வௌியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக தெரிவித்து தொழில் அமைச்சின் செயலாளர் ஆர்.பி.ஏ.விமலவீர இம்மாதம் 10ஆம் திகதியிடப்பட்ட புதிய அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டுள்ளார்.

தேயிலை மற்றும் இறப்பர் ஆகிய தொழில்துறைகளின் தொழிலாளர்களது குறைந்தபட்ட நாளாந்த கொடுப்பனவு தொடர்பில் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி இரத்து செய்யப்படுவதாக அவர் தனித்தனியாக 2 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles