நேபாள தலைநகர் காத்மண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காத்மண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானமே இவ்வாறு விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளான விமானம் தீப்பிடித்து எரிவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
சம்பவத்தை அடுத்து காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.