சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படை கஹவத்த முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அலபாத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரங்கொட விகாரைக்கு அருகில் நேற்று (23) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 200 மான்செஸ்டர் ரக சிகரெட்டுகள் மற்றும் 200 கோல்ட்லீஃப் ரக சிகரெட்டுகளுடன் இரத்தினபுரிஇ ஹங்கமுவ பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.