Friday, March 14, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுக்ளப் வசந்த சுட்டுக்கொலை: மேலும் இருவர் கைது

க்ளப் வசந்த சுட்டுக்கொலை: மேலும் இருவர் கைது

அத்துருகிரிய நகரில் க்ளப் வசந்த சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் அத்துருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து இருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை ஏற்றிச் சென்ற காரின் சாரதி என கூறப்படுகிறது.

மற்றைய நபர் சந்தேக நபர்களை தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக வெலிஹிந்த பகுதியிலிருந்து திக்வெல்ல பகுதிக்கு பேருந்தில் ஏற்றிச் சென்று பின்னர் செல்ல கதிர்காமம் பகுதியில் பேருந்தை மறைத்து வைத்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் வட்ஸ்அப் மூலம் வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 36 வயதுடைய வெலிபன்ன மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

முன்னதாக, கொலைச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதன்படி, சந்தேகநபர்கள் 8 பேரையும் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles