Wednesday, February 11, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுச்சக்கரவண்டிக்குள் இருந்து காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

முச்சக்கரவண்டிக்குள் இருந்து காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு

கொழும்பு, வோர்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (23) அதிகாலை ஒரு மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் குறித்த முச்சக்கரவண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியின் சாரதி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles