Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎத்தியோப்பாவில் நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரிப்பு

எத்தியோப்பாவில் நிலச்சரிவு: பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரிப்பு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.

திங்கள் கிழமையின் பிற்பகுதியில் 55 ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 157 ஆக உயர்ந்துள்ளது.

அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல தகவல் தொடர்பு அலுவலகத்தின் தலைவர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles