Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும திட்டம் தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும திட்டம் தொடர்பான அறிவிப்பு

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் இருந்து மாவட்ட மட்டத்தில் அதிகளவான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கணக்கெடுப்புக்கான ஒவ்வொரு விண்ணப்பத்தின் தகவல் சேகரிப்பும் IWMS மென்பொருளின் ஊடாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles