இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர்.
சண்டிகரிலிருந்து திப்ரூகர் நோக்கிப் பயணித்த ரயிலே கோண்டா பகுதியில் இவ்வாறு தடம் புரண்டுள்ளது.
இந்த விபத்தின் போது 4 ரயில் பெட்டிகள் கவிழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.