Sunday, September 8, 2024
28 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது காலி மார்வெல்ஸ்

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது காலி மார்வெல்ஸ்

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் சுற்றுப்போட்டியில் காலி மார்வெல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

குறித்த போட்டியில் காலி மார்வெல்ஸ் மற்றும் ஜஃப்னா கிங்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி மார்வெல்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 52 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் 178 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 18.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

குறித்த வெற்றியின் ஊடக காலி மார்வெல்ஸ் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இன்றைய டொலர் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 303.39...

Keep exploring...

Related Articles