நீண்ட காலமாக சட்டவிரோத போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்டு வந்த இரு இளைஞர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையின் திருகோணமலை முகாமின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (17) உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அபயபுர சந்தியில் உள்ள பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ சீட்டு இன்றி 300 போதை மாத்திரைகளை வைத்திருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலை பகுதியை சேர்ந்த 21 மற்றும் 26 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.