Sunday, January 11, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் பல்கலைக்கழகத்தில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது

தனியார் பல்கலைக்கழகத்தில் கைவரிசை காட்டிய 3 பேர் கைது

கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கணவன் மனைவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் “ரெட் பனாவத்தே புதா” மற்றும் “மருதானை இம்ரான்” என அழைக்கப்படும் இருவர் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களால் திருடப்பட்ட 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 மடிக்கணினிகள், கணனி உதிரிபாகங்கள், டேப் கருவிகள் மற்றும் விலையுயர்ந்த சைக்கிள் என்பன பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டி தேர்ஸ்டன் வீதியிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்திற்குள் இரவு வேளையில் நுழைந்து கணனிகளை திருடுவது, வீட்டுத் தொகுதியின் காவலரணில் உள்ள கணனிகள் உட்பட பல சொத்துக்களை திருடுவது, கொம்பனித்தெருவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டி மற்றும் பணப்பையில் இருந்த ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் மடிக்கணினிகளை திருடிச் சென்று அந்த அட்டைகள் மூலம் பால்மா மற்றும் கேக்குகள் கொள்வனவு செய்யப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles