சீனாவில் வர்த்தக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜிகாங் நகரில் உள்ள 14 மாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் கட்டிடத்தின் கூரையில் ஏறி உதவி கோரி கூச்சலிடுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில், 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.