ஒரு கோடி ரூபாவை கப்பமாகப் பெறும் நோக்கில் நபர் ஒருவரைக் கடத்திச் சென்று நாரம்மல – மெதகொட பகுதியில் தடுத்து வைத்திருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய குறித்த நபர் மாத்தளை நோக்கிப் பயணித்த போது மாவத்தகம பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.