Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உலகம்கணவரை பிரிந்தார் டுபாய் இளவரசி

கணவரை பிரிந்தார் டுபாய் இளவரசி

டுபாயின் ஆட்சியாளரின் மகளான ஷெயிக்கா மஹாரா பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், தனது கணவர் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூமை விவகாரத்து செய்வதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

குறித்த தம்பதி தமது முதல் குழந்தையை வரவேற்ற இரண்டு மாதங்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

அவரின் இன்ஸ்ட்ராகிராம் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

‘அன்புள்ள கணவரே எங்கள் விவாகரத்தை நான் இதன் மூலம் அறிவிக்கிறேன். நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன், நான் உன்னை விவாகரத்து செய்கிறேன். கவனமாக இருங்கள். உங்கள் முன்னாள் மனைவி’ என பதிவிட்டுள்ளார்.

இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டதுடன், அவர்கள் 12 மாதங்களுக்குப் பின்னர் தங்கள் மகளை வரவேற்றனர்.

அவர்களின் விவகாரத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles