Sunday, April 19, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்க நாளை முதல் முன் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை முறைமைக்கு அமைவாக கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை முதல் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் குடிவரவு திணைக்களத்திற்கு வந்து கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியாது என திணைக்களம் வலியுறுத்துகிறது.

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு, www.immigration.gov.lk இணையத்தளத்தின் ஊடாக முன் பதிவு செய்யப்பட வேண்டும்.

கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களும் புதிய விண்ணப்பதாரர்களும் முன்பதிவு செய்வது கட்டாயமாகும்.

அதன்படி, இதற்கு முன்னர் அமுலில் இருந்த கடவுச்சீட்டு விண்ணப்பிக்கும் முறை இன்றுடன் முடிவடைகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles