Saturday, January 18, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் - இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய் கப்பல் – இலங்கையர் உட்பட 9 பேர் மீட்பு

ஓமான் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பலில் இருந்து 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொமொரோஸ் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஓமானின் ராஸ் மத்ரகாவிலிருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் கடந்த திங்கட்கிழமையன்று கடலில் மூழ்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, அந்தக் கப்பலின் பணிக்குழாமில் 13 இந்தியர்களும், 3 இலங்கையர்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கப்பலைக் கண்டுபிடிப்பதற்காகவும், காணாமல்போயுள்ள பணிக்குழாமினரை மீட்பதற்காகவும் கப்பல் ஒன்றையும் விமானம் ஒன்றையும் இந்திய கடற்படை அப்பகுதிக்கு அனுப்பியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இதனைத் தொடர்ந்து 16 பேருடன் மூழ்கிய மசகு எண்ணெய்க் கப்பலைத் தேடும் முயற்சிகளில் இந்திய கடற்படையும் இணைந்திருந்த நிலையில், இலங்கையர் ஒருவர் உட்பட 9 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த கப்பலில் மொத்தமாக 16 பேர் பயணித்திருந்த நிலையில், எஞ்சியவர்களைத் தேடி மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles