Sunday, January 12, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'MasterChef' போட்டியில் கலக்கிய சவிந்திரி பெரேரா இலங்கைக்கு

‘MasterChef’ போட்டியில் கலக்கிய சவிந்திரி பெரேரா இலங்கைக்கு

2024 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘MasterChef’ போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற சவிந்திரி பெரேரா நேற்று (16) இலங்கைக்கு வருகை தந்தார்.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலிருந்து நேற்று (16) இரவு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-605 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பலரின் கவனத்தை ஈர்த்த ‘மாஸ்டர்செஃப்’ போட்டி அஸ்திரேலியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியுடன் இணைந்து இந்த ஆண்டு ஏப்ரல் முதல் 15ம் திகதி வரை நடைபெற்றது.

இந்த போட்டியில் மூன்றாவது இடத்தை இலங்கை வம்வசாவளி பெண்ணான சவிந்திரி பெரேரா பெற்றுக்கொண்டார்.

அந்த வெற்றியின் பின்னர், இலங்கையில் வசிக்கும் தனது உறவினர்களை சந்திக்க அவர் இலங்கை வந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles