இன்று (17) முதல் அமுலாகும் வகையில் இரசாயன உரங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் 5 வகையான உரங்களின் விலை குறைக்கப்பட்டது.
மேற்படி 5 வகையான உரங்களின் விலை இன்று முதல் 2,000 ரூபாவினால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.