பொது தகவல் தொழில்நுட்பத் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பரீட்சைக்கான விண்ணப்பங்களை 12/07/2024 முதல் 29/07/2024 வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் விண்ணப்பங்களை தங்களின் அதிபர்/ பாடசாலை பிரதானிகள் மூலமாகப் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்படி, தனியார் பாடசாலைகளின் அதிபர்கள்/ பிரதானிகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கைப்பேசி செயலியான ‘DOE’ க்கு பிரவேசித்து உரிய அறிவுறுத்தல்களை கவனமாக பின்பற்றி, பிழையின்றி இணையவழி முறையில் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.