இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே (Audrey Azoulay) சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.