யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே (Audrey Azoulay) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று (16) காலை அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.