சுரக்ஷா மாணவர் காப்புறுதிக்கான ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிட்டட் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித் திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கும் , அதற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து விலைமனுக் கோருவதற்கும் 2024-05-06 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, இலங்கை காப்புறுதி கூட்டுத்தானத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை முன்மொழிவு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, 2024 / 2025,
2025 / 2026 மற்றும் 2026 / 2027 ஆகிய ஆண்டுகளுக்காக சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டம் ரூபா 6.027 பில்லியன் (பெறுமதி சேர் வரி நீங்கலாக) தொகையில் அமுல்படுத்துவதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, மேலே குறிப்பிடப்பட்டவகையில் 03 ஆண்டு காலத்துக்கு சுரக்ஷா மாணவர் காப்புறுதிக்கான ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிட்டட் நிறுவனத்துக்கு வழங்குவதற்கும், சுரக்ஷா
மாணவர் காப்புறுதியின் கீழ் வருடாந்தம் 180,000 ரூபாவுக்கு குறைவான வருமானம் கொண்ட குடும்ப மாணவர்களின் பெற்றோரின் இறப்பு நன்மைகள் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.