மின்சாரக் கட்டணக் குறைக்கப்பட்டதை தொடர்ந்து சில உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ஆகியவற்றின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.
பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் ஏனைய சிற்றுண்டிகள் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.