Wednesday, January 15, 2025
25.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும்!

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அறிவிக்கப்படும்!

இம்மாத இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

ஜுலை மாதம் 17ஆம் திகதிக்குப் பின்னர் ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரையில் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசியல் யாப்பு மற்றும் தேர்தல் சட்டங்களுக்கு அமைவாக இடமுள்ளது.

அதன் அடிப்படையில் ஜுலை மாதம் இறுதிக்குள் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக்கப்படும்.

அந்த தினத்தில் இருந்து 14 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனு கோரல் திகதி நிர்ணயிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles