Wednesday, January 15, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியலமைப்பில் திருத்தம் செய்ய அங்கீகாரம்

அரசியலமைப்பில் திருத்தம் செய்ய அங்கீகாரம்

நாட்டின் 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கு ஊடக சந்திப்பிலேயே பந்துல குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தின் 83 ஆம் சரத்தில் காணப்படுகின்ற, பெரும்பான்மைக்கு அப்பால் என்ற வார்த்தைகளுக்கு பதிலாக ஐந்து ஆண்டுகளுக்கு அப்பால் என்ற சொற் தொடரை பயன்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட வல்லுணர்களினால் தயாரிக்கப்பட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles