ஸ்பெயின்(Spain) மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது.
ஜேர்மனியின் பெர்லின் நகரில் நேற்று இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் அணி வெற்றிபெற்றுள்ளது.
போட்டியில் ஸ்பெய்ன் அணி சார்பில் நிகோ வில்லியம்ஸ் (Nico Williams) 47 ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.
இதனையடுத்து, 73 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி சார்பில் சீ.பால்மர் (C.Palmer) கோலை அடித்தார்.
இந்தநிலையில், ஸ்பெய்ன் அணி சார்பில் போட்டியின் 86 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை மிக்கெல் ஒயர்ஸபல் (Mikel Oyarzabal)அடித்ததையடுத்து, 2 க்கு 1 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணியை ஸ்பெய்ன் அணி வெற்றிகொண்டுள்ளது.
அதன்படி, 2024 யூரோ கிண்ண காற்பந்தாட்ட தொடரில் ஸ்பெய்ன் அணி சாம்பியன் ஆகியுள்ளது.