Saturday, April 19, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று அறிவிப்பு

மின் கட்டண திருத்தம் தொடர்பில் இன்று அறிவிப்பு

திருத்தப்பட்ட மின்கட்டணத்தை பொது பயன்பாட்டு ஆணையம் (PUCSL) இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்

மின்சார சபையின் முன்மொழிவுகளை மீளாய்வு செய்து, உரிய தரவுகளை ஆராய்ந்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கருத்திற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் இன்று காலை விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன் பிற்பகலில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, மின் கட்டணத்தை சுமார் 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

மேலும் வீடு மற்றும் மத தலங்களில் மின்கட்டணம் 18 சதவீதத்தாலும், கைத்தொழில்சாலைகள், ஹோட்டல்களுக்கான மின்கட்டணம் 12 சதவீதத்தாலும், அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கான மின்கட்டணம் 24 சதவீதத்தாலும் குறைக்கப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles