மிஹிந்தலை பிரதேச வைத்தியசாலையில் தடிமன் மற்றும் சளிக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்த வைத்தியசாலையில், சிகிச்சை பெற்ற சிறுவர்களுக்கே இந்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து மிஹிந்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 13 சிறுவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் 6 முதல் 13 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.