முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழாய்வின், எட்டாம் நாள் அகழாய்வு செயற்பாடுகள் நேற்று (12) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் தகடு ஒன்றும், துப்பாக்கி சன்னங்களும், விடுதலைப் புலிகளின் சீருடைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட அகழாய்வின்போது, மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின்போது நேற்றுடன் 45 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரிகளின் கண்காணிப்புகளின் கீழ் தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இந்த அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் உத்தியோகத்தர் மத்தீவ் கின்சன் மற்றும் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுளந்த, பணிப்பாளர் ஜெ.தர்பரன் உள்ளிட்டவர்களும் குறித்த அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட்ட இடத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.