Sunday, December 21, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரயாய பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (12) இரவு இடம்பெற்ற மோதலில் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வீரகெட்டிய மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு (12) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியைக் காண வந்த குழுவினருக்கும், நிகழ்ச்சி மைதானத்தில் சாரவிட்ட விற்பனை செய்தவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் ஒருவர் தலையிட்டு தீர்த்து வைத்துள்ளார்.

அப்போது, ​​சம்பந்தப்பட்ட குழுவினர் ஏற்பாட்டுக் குழு உறுப்பினரை தாக்கியதுடன், மற்றைய உறுப்பினர்கள் வம்பிழுத்தவர்கள் மீது கத்தியால் தாக்கியுள்ளனர்.

அப்போது, ​​6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொரயாய தெற்கு, வேகந்தவல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலையுடன் தொடர்புடைய ஒருவரை வீரகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles