மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 114 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டம் நேற்று (12) இடம்பெற்றது.
மேற்கிந்திய அணி முதல் இன்னிங்ஸில் 121 ஓட்டங்களையும் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 371 ஓட்டங்களையும் எடுத்திருந்தது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 136 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
இதனடிப்படையில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டிக்கு பிறகு இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.