Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்று 9 அலுவலக ரயில்கள் ரத்து

இன்று 9 அலுவலக ரயில்கள் ரத்து

இன்று (12) காலை இயக்கப்படவிருந்த சுமார் ஒன்பது அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவடைந்ததையடுத்து குறித்த ரயில்களுக்குத் தேவையான ரயில் பெட்டிகளை பயணம் ஆரம்பிக்கும் நிலையத்திற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே ரயில் சேவைகளை இரத்து செய்ய நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு நாள் ரயில் சேவை பணிப்புறக்கணிப்பை முடித்துக் கொண்ட ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று இரவு 12 மணிக்கு பணிக்கு சமூகமளித்துள்ளதாகவும், நாளை (13) காலைக்குள் ரயில் சேவை வழமைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles