Thursday, October 9, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய பிரஜைகள் 6 பேர் கைது

இந்திய பிரஜைகள் 6 பேர் கைது

விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த 06 இந்திய பிரஜைகளை சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள் குழுவொன்று தங்கியிருப்பதாக கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (11) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இந்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1,000 சிகரெட்டுகளை (50 பொதிகள்) வெளிநாட்டவர் ஒருவர் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

25, 26, 33, 38, 39 மற்றும் 42 வயதுடைய இந்திய பிரஜைகள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles